சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் 1500 தியேட்டர்களில் வெளியாகின்றது.
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்ன, கிச்சா சுதிப் என இந்தியாவின் பிரதான மொழி கலைஞர்களை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம் தான் சைரா நரசிம்ம ரெட்டி.
வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி சிறப்பு திரைப்படமாக இந்த படம் ரிலீசாகிறது.
தெலுங்கில் உருவாக்கப்பட்டு பாலிவுட்டில் மாபெரும் வசூல் சாதனையை பாகுபலி படம் நடத்தியதாலும், சைரா படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்திருப்பதாலும், நாயகன் சிரஞ்சீவிக்கும் பாலிவுட் மிகப் பரீட்சையமான ஏரியா என்பதாலும், சுமார் 1500 திரையரங்குகளில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர், தமிழ், தெலுங்கு மொழிகளை விட ஹிந்தி டப்பிங்கில் அதிகமான எண்ணிக்கையில் பார்க்கப்பட்டிருப்பதால், பாலிவுட்டில் சைரா படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கியுள்ள ஃபர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் ஷித்வானி, படத்தை அதிக எண்ணிக்கையில் திரையரங்குகளில் வெளியிட்டால் நிச்சயம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தலாம் என டார்கெட் செய்துள்ளனர்.