அரியானாவில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர் திடீர் சாவு

Feb 27, 2018, 08:38 AM IST

சண்டிகர்: அரியானாவில் மருத்துவம் படித்து வந்த தமிழக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவர் திடீரென அவர் தங்கி இருந்த விடுதியில் தூக்குப்போட்டுக் கொண்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கிருஷ்ண பிரசாத். அரியானா மாநிலம் சண்டிகரில் உள்ள நேரு மருத்துவமனை கல்லூரியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கிருஷ்ண பிரசாத் திடீரென நேற்று அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டார். கிருஷ்ண பிரசாத் தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது வேறேதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ண பிரசாத் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது குடுபத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும், கிருஷ்ண பிரசாத்தின் உடலை ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரும் நடிவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை