கலப்பு திருமணம் செய்த 12 குடும்பம் ஊரை விட்டு வெளியேற்றம் - சினிமாவை மிஞ்சும் தமிழக கிராமம்

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Feb 27, 2018, 08:45 AM IST

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கிராமத்தில் நுழையும் பகுதியில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் அந்த தடுப்பை தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 12 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளிப்படையாக தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுடன் ஊர்மக்கள் உணவு, நீர் புழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிப்பதற்கு தனியாக ஒரு படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட சாதி மறுப்பு தம்பதியினர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் அளித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே கிராமத்தில் வேறு சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டு வரும் ஆண்கள் அதே கிராமத்தில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் புன்னைக்காயல் கிராமத்தில் இருக்கும் பெண்கள் மாற்று சாதி ஆண்களை திருமணம் செய்தால் அவர்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறுவதோடு, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

You'r reading கலப்பு திருமணம் செய்த 12 குடும்பம் ஊரை விட்டு வெளியேற்றம் - சினிமாவை மிஞ்சும் தமிழக கிராமம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை