திருச்சியில் பரபரப்பு: காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பலி

Mar 8, 2018, 08:11 AM IST

திருச்சி: ஹெல்மெட் அணியாமல் சென்றதால் காவல் ஆய்வாளர் பின்துரத்தி இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி கீழே விழுந்து அவர் மீது வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமான காவல் ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று இரவு போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் தம்பதியினர் வந்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ஹெல்மெட் அணியாததால், காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் அவர்களை நிறுத்த முற்பட்டனர். ஆனால், தம்பதியினர் வண்டியை நிறுத்தாமல் சென்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஆய்வாளர் இருசக்கர வாகனத்தை பின்துரத்தி எட்டி உதைத்துள்ளார். இதில், நிலைத்தடுமாரி வாகனம் சாய்ந்ததில் கர்ப்பிணி கீழே விழுந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வந்த வேன் ஒன்று கர்ப்பிணி மீது மோதியது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவரும் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சுமார் 3000 மேற்பட்ட பொது மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கர்ப்பிணி மரணத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல் துணை ஆணையர் சக்தி கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், விபத்துக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள காமராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி உறுதி அளித்துள்ளார்.

You'r reading திருச்சியில் பரபரப்பு: காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை