"நீட் தேர்வு எழுத ஆதார் கட்டாயமில்லை" என உச்ச நீதிமன்றம் கண்டிப்பான ஒரு உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வு எழுத விரும்புகிறவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை நீட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ பிறப்பித்தது. இது அர்தமற்ற உத்தரவு என சிபிஎஸ்இ-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து இறுதித்தீர்ப்பு தற்போது வழங்கபட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து தலைமை நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இறுதியாக, "நீட் தேர்வு எழுதுவதற்காக ஆதார் எண் கட்டாயமாக்கப்படக்கூடாது. ஆதார் அட்டை என்ற 12 இலக்க அடையாள கட்டை இன்னும் பல நிலைகளில் கட்டாயமா இல்லையா என்பதையே இதுவரையில் விளக்கப்படவில்லை.
இன்னும் வங்கிக்கணக்கு, மொபைல் எண்களுடன் மக்கள் இணைப்பதில் சிக்கலில் உள்ளனர். இதனால், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதார் கட்டாயம் இல்லை" என அறிவித்தனர்.