மலேசியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் புலி போன்று பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒரு நாயின் புகைப்படம் சமூக இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவரம் மலேசியாவில் உள்ள விலங்குகள் நல அமைப்பினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த நாயின் உடலில் பெயிண்ட் அடித்தது யார் என்ற விசாரணையில் அந்த அமைப்பு களமிறங்கியது. தீவிர விசாரணையில் அந்த நாய் எந்த பகுதியில் இருக்கிறது என்ற விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நாயின் உடலில் பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசாரும் இறங்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மலேசியாவில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாயின் உடலில் அடிக்கப்பட்ட பெயிண்ட் விஷத்தன்மை கொண்டது என்றும், அது அந்த விலங்கின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் நாய்ப்புலியால் பரபரப்பு
Advertisement