தமிழக அரசின் நடவடிக்கையால் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்கள் ..

by Loganathan, Sep 1, 2020, 21:15 PM IST

தமிழக அரசின் நடவடிக்கையால் 2 இலட்சம் தகுதியில்லாத மாணவர்கள் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க தொடங்கிய நிலையில் இந்தியாவில் மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் நடைமுறை படுத்தப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள் முதல் பள்ளி , கல்லூரி வரை அனைத்தும் மூடப்பட்டன. இன்னும் தாக்கம் குறையாததால் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி அடைய அரசாணை வெளியிட்டது.

பின்னர் நீண்ட ஆலோசனைகளுக்கு பின் கல்லூரி படிக்கும் ( அனைத்து பாடதிட்டங்களும்)இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் அந்த வருட பருவத்தேர்வில் தேர்ச்சி என்ற அரசாணையையும் , அவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் வழிமுறைகளை யூஜிசி ன் அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்டது.

பின்னர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் நிலுவையில் உள்ள அனைத்து பாடங்களையும் ( including arrear except final year student ) தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அதற்கான அரசாணை கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் இடையே பெரிய அதிர்ச்சியையும் , சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பால் கடினமாக உழைத்து பெற வேண்டிய பொறியியல் பட்டம் மிக சுலபமாக தரமில்லாத மாணவர்களுக்கு கிடைக்க கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் கட்டணம் கட்டாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்பது அபத்தாமக உள்ளதென்று மற்ற மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கட்டணம் செலுத்துவது மட்டமே தேர்ச்சிக்கான வரையறையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

4 இலட்சம் மாணவர்கள் தமிழகத்தில் மட்டும் பொறியியல் படிக்கிறார்கள் ஒட்டு மொத்தமாக .

இந்த அறிவிப்பால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தின் தன்மை குறையும் மற்றும் அதன் பாரம்பரியம் கேள்விகுறியாகி உள்ளது.

ஒரு மாணவன் தனது மொத்த பாடமான 65 ல் 63 அரியர் வைத்துள்ளதாக கண்டுபிடிக்கபட்டுள்ளது . அரசின் அறிவிப்பால் இந்த மாணவன் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Tamilnadu News

அதிகம் படித்தவை