அமெரிக்காவில், நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பெண் விமானிக்கு மயக்க மருந்து கொடுத்து சக விமானியால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின், அலாஸ்கா விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் முறையில் பணியமர்த்தப்பட்டார். இவருடன், மூத்த சக ஆண் விமானியும் மூன்று நாட்களுக்கு ஒன்றாக பணிப்புரிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், பெட்டி பீனா அந்த ஆண் விமானியுடன் விமானத்தில் பயணித்தார். அப்போது, அவர் பெட்டி பீனாவிற்கு மயக்க மருந்து கலந்த மது கொடுத்துள்ளார். இதுப்பற்றி தெரியாமல், பெட்டி பீனா மதுவை குடித்துள்ளார். பின்னர், சில நிமிடங்களில் பெட்டி பீனா விமானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
தொடர்ந்து, பெட்டி பீனாவை தனது அறைக்கு அழைத்து சென்ற ஆண் விமானி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி உள்ளார். மயக்கம் தெளிந்த பிறகே, பெட்டி பீனாவிற்கு நடந்த கொடுமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆண் விமானி மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆறு மாதமாக பெட்டி பீனா விமான நிறுவனத்திடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அந்நிறுவனம் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபோன்று, இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண் விமானிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.