நடிகை ராதிகா ஆப்தே முதன்முறையாகத் தனது சொந்த வாழ்க்கைக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கோலிவுட், பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை பெரிய திரை படமோ, குறும்படமோ தனக்கென ஒரு தனி ஸ்டைல் அமைத்து கலக்கி வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் 'கபாலி' திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றுள்ளார்.
பெரிதாகத் தனது பெர்சனல் வாழ்க்கைக் குறித்து இதுவரையில் பொதுவெளியில் எந்தவொரு பேச்சும் வைத்துக்கொள்ளாத ராதிகா ஆப்தே, தற்போது தனது இல்லம், கணவர், குடும்பம் குறித்து புதியதொரு 'வெப்-சீரிஸ்' ஒன்றுக்காக மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.
ராதிகா ஆப்தே கடந்த 2012-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பாடகர் பெனிடிக்ட் டெய்லர் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். லண்டனுக்கும் மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கும் ராதிகா, தனது வீடு மற்றும் குடும்பம் மீது மிகுந்த அக்கறைக் கொண்டவராம். இதையே மையக்கருத்தாகக் கொண்டு அந்த வெப்-சீரிஸ் தயாராகி வருகிறது.