நாங்குநேரி அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய் -மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பழிக்கு பழியாக தொடர் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாசலம் என்பவரது மகன் நம்பிராஜன். இவர் அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகள் வான்மதியை இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த திருமணத்தால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது். நம்பிராஜன் வான்மதி தம்பதியினர் நெல்லை டவுணில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி நம்பிராஜன் . கொலை செய்ப்பட்டார் .
இந்த கொலை வழக்கில் வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி மற்றும் உறவினர்கள் செல்லத்துரை , முருகன் ஆகியோரை கைது செய்ப்பட்டனர் . இதனைத் தொடர்ந்து நம்பிராஜன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கடந்த 14-03-20 அன்று நம்பிராஜன் கொலை வழக்கில் தொடர்புடைய செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் நாங்குநேரியில் கொலை செய்யப்பட்டனர் . இந்த கொலை வழக்கு தொடர்பாக நம்பிராஜனின் அண்ணன் ராமையா , தாய் சண்முகத்தாய் மற்றும் சங்கர் , இசக்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் மறுகால்குறிச்சியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர் . ஆனால் ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்த ராமையா சண்முகத்தாய் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் ராமையா, உறவினர்கள் சுரேஷ், இசக்கி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.. வீட்டில் தாய் சண்முகத்தாய் ,அவரது கணவர் அருணாச்சலம் மட்டும் இருந்துள்ளனர் . அருகில் சண்முகத்தாயின் மகன் சாந்தி வசித்து வருகிறார் . இந்நிலையில் பட்டபகலில் முகமூடி அணிந்த நிலையில் 12 பேர் கொண்ட மர்ம கும்பல் சாந்தி வீட்டிற்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி சாந்தியின் கழுத்தை அறுத்து துண்டித்து கொலை செய்து அவரது தலையை கையில் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த சண்முகத்தாய் வீட்டிற்குள் வெடிகுண்டுகளை வீசி உள்ளனர் . இதில் அருணாசலம் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார் .
வீட்டிற்குள் இருந்த சண்முகத்தாயையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு சாந்தியின் தலையை நடுரோட்டில் வைத்துவிட்டு 12 பேர் கொண்ட கும்பலும் தப்பியோடிவிட்டது. இதில் சாந்தியின் 3 வயது குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர் . பின்னர் இருவரது உடலையும் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர் . நாங்குநேரி டோல்கேட் சிசிடிவி கேமரா கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .