போதை மருந்து விவகாரம்: 4 நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல்.. பிரபல நடிகையிடம் கிடுக்குபிடி விசாரணை

Durg Case Police Enquiry To Rakul Preet Singh

by Chandru, Sep 27, 2020, 14:13 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு போதை பொருள் மருந்து விவகாரமாக மாறி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் போதை மருந்து தடுப்பு விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் உள்ளன.


இந்நிலையில் தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளை விசாரணைக்கு ஆஜராகும் படி என் சி பி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர் . முன்னதாக தீபிகா படு கோன் மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய அதிகாரிகள் தீபிகாவுக்கு எதிரான தகவல்களை திரட்டினார்.
தீபிகா விளம்பர பட ஷுட்டிங்கில் கோவாவில் இருந்த நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட தீபிகா நேற்று மும்பை வந்து விசாரணைக்காக ஆஜரானார்.
தீபிகாவை விசாரிக்கும்போது தானும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது கணவர் ரன்வீர் சிங் கேட்டார் அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. இந்நிலையில் இந்த பிரச்னையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி பிரபல வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் ரன்வீர் சிங்.
போதை பொருள் விவகாரத்தில் சம்பந்தப் பட்ட நடிகை ரகுல் பிரீத் சிங் இன்று அதிகாரரிகள் முன் விசாரனைக்கு ஆஜரானார். ஏற்கனவே அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தபோது போதை பொருள் சிக்கியது. மேலும் செல்போனில் அவர ரியாவுடன் போதை மருந்து பற்றி பேசி இருக்கிறார். இதெல்லாம் ரகுல் பிரீத்துக்கு எதிராக இருக்கிறது. அதைப்பற்றியும், போதை பொருள் விற்பவர்கள் பற்றியும் அதிகாரிகள் ரகுலிடம் வளைத்து வளைத்து விசாரித்தனர்.


விசாரனையில் ரகுல் அளித்த பதில் பற்றி அதிகாரிகள் கூறும்போது.ரியாவுடன் போதை பொருள் பற்றி ரகுல் பிரீத் போனில் பேசியதை ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது வீட்டில் கைப்பற்றப் பட்ட போதை பொருள் தன்னுடையது அல்ல ரியாவுக்கு சொந்தமானது அவர் விட்டுக்கு வந்து எடுத்துச் செல்வதாக கூறி இருந்தார் என தெரிவித்தார் என கூறினார்கள்.
இதற்கிடையில் தீபிகா படுகோன், ரகுல் பிரித், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் பயன்படுத்திய செல்போன் களை போதை மருந்து தடுப்பு அதிகார்கள் பறிமுதல் செய்து அதில் அவர்கள் யார் யாருடன் பேசி உள்ளனர். போதை மருந்து விவகாரம் தொடர்பாக பேசி இருக்கி றார்களா என்பதை முழுவதுமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை