மாமனாரின் பாலியல் தொல்லையால் மருமகள் தற்கொலை

women gets tortured by her father in law

by Logeswari, Sep 29, 2020, 20:51 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,மாமனார்,மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி அருகே அக்ராஹரம் பகுதியில் வசிப்பவர் சந்தியா.இவரது கணவர் கண்ணன் ஆவார்.இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றது.கடந்த சில நாட்களாக சந்தியாவின் கணவர் வீட்டில் இல்லாதபொழுது அவரது மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதனை தனது கணவரிடம் சொல்ல முடியாமல் சந்தியா மிகவும் மனசுடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளார்.இந்நிலையில் சந்தியா தனது பிறந்த வீட்டுக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Crime News

அதிகம் படித்தவை