3 அடி உயர குள்ள பெண்ணுக்கு சிசேரியனில் பிறந்த குழந்தை,, மருத்துவர்கள் சாதனை

by Logeswari, Sep 29, 2020, 20:33 PM IST

கும்பகோணத்தில் 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை.

தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (35) இவரின் மனைவி அனிதா (28).அனிதாவிற்கு பிறவியிலே எலும்பு வளராத காரணத்தில் 3 அடி உடைய குள்ளமான உருவத்தில் உள்ளார்.கடந்த ஆண்டு ரெங்கராஜ் மற்றும் அனிதாவிற்க்கு திருமணம் நிகழ்ந்துள்ளது இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.கும்பகோணத்தில், மகப்பேறு மருத்துவர் ஆன விஜிலாவிடம் மாதம் தோறும் பரிசோதனை பெற்றார்.நேற்றைய முன்தினம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

டாக்டர் விஜிலா,தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை