13 வயது மூத்தவரை திருமணம் செய்ததால் பெண்ணுக்கு நடந்த கோரச் சம்பவம்.. திகில் நிறைந்த மர்மம்!

by Logeswari, Oct 9, 2020, 16:04 PM IST

தன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்த பெண் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கிராமத்தை சேர்ந்த ரத்தினத்தின் மகன் பாக்கியராஜ் (32) என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் கெளசல்யாவுக்கும் (19) இரண்டுமாதத்திற்கு முன்பு பெரியவர்கள் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று இரவு கெளசல்யா மர்மமான முறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதைக்குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் இருப்பதை பார்த்துவிட்டு தூக்கில் தொங்கி இருந்த கெளசல்யாவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கெளசல்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இறந்த பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீஸ் கெளசல்யாவின் கணவரான பாக்கியராஜ்,அவரது தந்தை ரத்தினம் ஆகியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get your business listed on our directory >>More Crime News

அதிகம் படித்தவை