வெள்ளி விழா ஹீரோவின் பேத்தி நடிக்கும் புதிய படம்..

actor ravichandran grand daughter in new film

by Chandru, Oct 9, 2020, 15:45 PM IST

1960, 70களில் வெளியாகி வெற்றி பெற்ற காதலிக்க நேரமில்லை, மூன்றெழுத்து, நான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து வெள்ளி விழா நாயகன் என்று பெயரெடுத்தவர் ரவிச் சந்திரன். இவரது பேத்தி தான்யா.இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் கருப்பன், மற்றும் பலே வெள்ளிய தேவா, பிருந்தாவனம், மாயோன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது புதிய படத்தில் நடிக்கிறார்.

சுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் தற்போது பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கித் தயாரித்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். கிரைம் த்ரில்லராக உருவாகும் இதில் இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றார்.

தான் எழுதும் கதைகளில் வாழ்வின் எதார்த்தங்களை நிரப்பி, திரைக்கதையில் புதுமைகளைப் புகுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கி பலரது பாராட்டைப் பெற்றவர் பிரபாகரன்.மேலும் நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோர் அறிமுகமாகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.தயாரிப்பு, எழுதி பிரபாகரன் இயக்க கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்கிறார். மைக்கேல் ராஜ் அரங்கம் அமைக்கிறார். பிஜு.V. டான் பாஸ்கோ படத் தொகுப்பு செய்கிறார். பி.சுரேஷ் தயாரிப்பு நிர்வாகம் செய்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை