தேர்வெழுதுவதாக தந்தையிடம் கூறி மாணவியை வரவழைத்து பள்ளி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகர் மாநிலம் சோனிபட் நகரில் உள்ள கோஹானா பகுதியில் உள்ள பள்ளியின் முதல்வர், அப்பள்ளி மாணவி ஒருவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவைப்பதாக கூறி பத்தாயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி குறிப்பிட்ட அந்த மாணவியை உறவினரின் இல்லத்துக்கு அழைத்து வரச்சொல்லி இருக்கிறார்.
அப்போது மாணவியின் தந்தையிடம், உடற்கல்வி தேர்வை, இன்னொரு போலி மாணவியை விட்டு எழுதச் சொல்லியிருப்பதாகவும், இதனால், அந்த மாணவியை அங்கேயே விட்டுவிட்டு பிறகு வரச்சொல்லி இருக்கிறார்.
பின்னர் மாணவியின் தந்தை திரும்பிவந்த போது மாணவி அழுதுபடி இருந்துள்ளார். இது குறித்து தந்தை கேட்டபோது, கல்லூரி முதல்வர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள இரண்டு பெண்கள் தன்னிடம் நைசாக பேசி சம்மதிக்க முயற்சி செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் வாக்குமூலத்தைப் பெற்ற போலீசார், பள்ளி முதல்வர் மீதும், அவருக்கு உதவிய இரண்டு பெண்கள் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கிரமினல் வழக்கு பதிவு செய்தனர். விஷயத்தை அறிந்த மூவரும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.