டாக்டரை நிர்வாணப்படுத்தி இளம் பெண்ணுடன் நிற்க வைத்து ஆபாச போட்டோ.. பணம் பறிக்க திட்டமிட்ட 3 பேர் கைது.

by Nishanth, Nov 6, 2020, 20:11 PM IST

டாக்டரை மிரட்டி இளம்பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாச போட்டோ எடுத்து பணம் பறிக்க முயற்சித்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சியில் இந்த சம்பவம் நடந்தது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள களமசேரி பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ஈப்பன். டாக்டரான இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கொச்சியில் சொந்தமாக ஒரு கிளினிக் கட்ட முடிவு செய்திருந்தார். இதற்காக இவர் இடத்தை தேடி வந்தார். இது தொடர்பாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரை செல்போனில் அழைத்த அஜ்மல் என்ற நபர் கொச்சியில் நல்ல ஒரு இடம் இருப்பதாகவும் அது தொடர்பாக பேச வருமாறும் கூறியுள்ளார்.

அந்த நபர் கூறியபடி கடந்த இரு தினங்களுக்கு முன் டாக்டர் ஜேக்கப் களமசேரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்றார். ஒரு அறையில் அஜ்மல் டாக்டருக்காக காத்திருந்தார். பின்னர் இருவரும் அந்த அறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு இளம்பெண்ணுடன் அறைக்குள் புகுந்த 2 பேர் டாக்டரை கத்தியைக் காட்டி மிரட்டி நிர்வாணப்படுத்தினர். பின்னர் அந்த இளம்பெண்ணுடன் நிற்கவைத்து அக்கும்பல் வீடியோவும், போட்டோவும் எடுத்துள்ளனர். தங்களுக்கு 5 லட்சம் பணம் வேண்டும் என்றும், தராவிட்டால் வீடியோவையும், போட்டோவையும் சமூக இணைதளங்களில் வெளியிடுவோம் என்றும் அந்தக் கும்பல் மிரட்டியது. வீட்டுக்கு சென்று பணம் எடுத்து தருவதாக கூறிவிட்டு டாக்டர் ஜேக்கப் அங்கிருந்து சென்றார். ஆபாச வீடியோவும், போட்டோவும் தங்கள் கைவசம் இருப்பதால் இது குறித்து டாக்டர் ஜேக்கப் போலீசில் புகார் செய்ய மாட்டார் என அக்கும்பல் கருதியது.

ஆனால் அவர் தன்னை கும்பல் மிரட்டியது குறித்து களமசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டரை மிரட்டிய ரோஷ்வின் (23), ஜம்ஷாத் (25) மற்றும் அனுபமா (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் மற்றும் வினீஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்