விஜய் சேதுபதிக்கு வந்தது கேரள சூப்பர் ஸ்டார் மகளுக்கும் நேர்ந்தது!

Dileeps daughter Meenakshi files complaint against FB pages

by Sasitharan, Nov 6, 2020, 20:16 PM IST

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை படமாக உருவாகவிருந்த 800 பட விவகாரத்தின் போது அவருடைய மகளைப் பற்றி ஒருவர் அவதூறாகப் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் தேடினர். அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.தற்போது அந்த நபர் விஜய் சேதுபதியிடமும் அவரது மகளிடமும் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். இதேபோன்று ஒரு சூழ்நிலை தற்போது கேரள சூப்பர் ஸ்டார் திலீப் மகளுக்கும் நிகழ்ந்துள்ளது. திலீப் - மஞ்சு வாரியாருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார். 20 வயதாகும் மீனாட்சி சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார்.

இந்நிலையில் தான் இணையதளங்கள் மூலமாக அவதூறு தன் பெயரில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது என்று மீனாட்சி குற்றம் சுமத்தி இருக்கிறார். விஜய் சேதுபதி மகளுக்கு வந்தது பாலியல் மிரட்டல் எதுவும் இவருக்கு வரவில்லை. அதேநேரம் அவரின் தந்தை குறித்து அவதூறு தகவல் வரவே, இப்போது போலீஸை நாடியிருக்கிறார். போலீஸில் அளித்துள்ள புகாரில், ``தான் தற்போது தனது தந்தை திலீப்புடன் வசித்து வரும் நிலையில், தாயின் மதிப்பை உணர்ந்து மஞ்சு வாரியருடன் சென்று விட்டதாக கூறி வருகிறார்கள் சில இணையதள நிறுவனங்கள். மேலும் என் தந்தையை கொடூரமாக சித்தரிக்கிறார்கள். இது எனது தந்தையை அவதூறு செய்வதற்கான முயற்சி" என்று கூறியுள்ளார். இவரின் புகாரின் அடிப்படையில் சில நிறுவனங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை