14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..!

by Logeswari, Nov 23, 2020, 19:15 PM IST

விழுப்புரத்தில் பெற்ற மகள் என்று கூட பாராமல் கர்ப்பம் ஆக்கிய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சில நாட்களாக சிறுமிக்கு வாந்தி, தலை சுற்றல் போன்றவை ஏற்பட்டதால் சிறுமியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பம் ஆக உள்ளதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த தாய் சிறுமியிடம் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று விசாரித்த பொழுது அதே பகுதியில் உள்ள வாலிபர் என்று சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமி சொன்ன அடையாளத்தை வைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில் இறங்கி தேடி வந்தனர். ஆனால் சிறுமி சொன்ன அடையாளத்தில் அப்படி யாரும் இல்லை என்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பிறகு சிறுமியிடம் ரகசியமாக விசாரித்த போது தனது கர்ப்பத்துக்கு தந்தை தான் காரணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீஸ் சிறுமியின் தந்தையிடம் விசாரத்த பொழுது உண்மையை ஒப்பு கொண்டார். போலீஸ் 14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய குற்றத்திற்காக சிறுமியின் தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்..

You'r reading 14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை