வீடியோ சேனலுக்கு தடை விதித்ததால் ஆத்திரம்: யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி பெண் தற்கொலை

Apr 4, 2018, 13:40 PM IST

வயது கட்டுப்பாட்டை காரணம்காட்டி, தனது விடீயோக்களுக்கு தடை விதித்ததால் ஆத்திரமடைந்த பெண் யூ டியூப் அலுவலகத்திற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோவில் யூ டியூப் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் நேற்று திடீரென அத்துமீறி நுழைந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். பின்னர், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயம் அடைந்த நான்கு ஊழியர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அப்பகுதியை பதற்றமான பகுதியாக அறிவித்து சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில் யூ டியூப் அலுவலகத்தில் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்திய சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயர் நாசிம் அக்தம் (39) என்றும் சான் டியாகோ பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இவர் ஆங்கிலம், துர்கிஷ், பாரிஸ் உள்ளிட்ட மொழிகளில் யூ டியூப் சேன்னல்களை நடத்தி வந்துள்ளார். ஆனால்,  வயது கட்டுப்பாட்டை காரணம் காட்டி இவரது விடீயோக்களுக்கு யூ டியூப் தடை விதித்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண், யூ டியூப் அலுவலகத்திரு சென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

யூ டியூப் அலுவலகத்தின் ஊழியர்கள் இரு கைகளையும் உயர தூக்கியபடி வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வீடியோ சேனலுக்கு தடை விதித்ததால் ஆத்திரம்: யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி பெண் தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை