பெண் கொடுக்காததால் மூதாட்டிகளை நிர்வாணமாக்கி ரசித்தேன் என்றும் எய்ட்ஸ் பயத்தால் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை என்றும் சைக்கோ கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரியை அடுத்த வி.கே.ஆர்.புரம் கிராமத்தில் தனியாக வசித்துவந்த ரத்தினம்மாள் என்ற மூதாட்டி தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே பிணமாக கிடந்தார். மேலும், ரத்தினம்மாளின் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்லால் கடித்த காயங்கள் இருந்தன.
இதே போல் கடந்த 9ஆம் தேதி சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தனியாக இருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது உடலிலும் பல இடங்களில் பல்லால் கடித்த காயங்கள் இருந்தன.
இதனைக் கண்ட ஆந்திர காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு பேரின் உடலில் பல்லால் கடித்த காயங்கள் இருந்தால் போலீஸார் சந்தேகமடந்தனர். மேலும், வெள்ளையம்மாள் கொலை செய்யப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை வேலூர், வாலாஜாபாத்தை அடுத்த மாதாங்கல் கிராமத்தை சேர்ந்த முனுசாமியின் கைரேகையுடன் ஒத்துப்போனது.
இதனையடுத்து முனுசாமியை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த முனுசாமியை, வாலாஜாபாத்தில் வைத்து, சித்தூர் போலீசார் கைது செய்தனர். முனுசாமி இதுவரை 7 கொலை, நான்கு கொலை முயற்சிகள், 30 க்கும் மேற்பட்ட வழிப்பறிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், 2001 ஆண்டு ஒரு கொலை, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து முனுசாமி காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், “நான் சிறுவயதில் இருந்தே வீடுபுகுந்து திருடி வந்தேன். எனவே, யாரும் திருமணம் செய்து கொள்ள பெண் கொடுக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த எனக்கு பெண்கள் மீது தீராத ஆசை ஏற்பட்டது.
தனியாக இருக்கும் மூதாட்டிகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க செல்வேன். அப்போது மூதாட்டிகளை நிர்வாணமாக்கி ரசிப்பேன். எய்ட்ஸ் பயத்தால் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை. பெண்களை நிர்வாணமாக்கி விட்டு காயப்படுத்துவேன். இதில் அவர்கள் இறந்து விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.