உத்திரப்பிரதேசம் மாநிலம் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ராம்பவன் சிங் (40) என்பவர் தனது மனைவி துர்காவதியுடன் உத்தரபிரதேச மாநிலம் பண்டேல்கண்ட் நகரில் வசித்து வந்தார். இதற்கிடையே, ராம் பவன் சிங் சிறுவர், சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வீடியோ எடுத்து வந்து ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக தகவல்கள் சிபிஐக்கு கிடைத்த நிலையில், ராம் பவன் சிங்கை கடந்த சில மாதங்களாக சிபிஐ கண்காணித்து வந்தது. தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் ராம்பவன் சிங்கை சிபிஐ கைது செய்தது. ராம்பவனிடம் இருந்து ரூ.8 லட்சம் ரொக்கம் பணம், 12 செல்போன்கள், 2 மடிக்கணினிகள், 6 பென் டிரைவ்கள், 6 மெமரி கார்டுகள், ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், ஒரு ஸ்பை கேம் உள்ளிட்டவைகளை சிபிஐ கைப்பற்றியுள்ளது. லேப்டாப் மற்றும் பென் டிரைவ்களில் இருந்து சுமார் 50 சிறுவர்களின் 66 பாலியல் வீடியோக்கள், 600 புகைப்படங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்த ராம் பவன் சிங்கிற்கு 11 வருடங்களாக குழந்தை இல்லை. 2009-ம் ஆண்டு தான் ராம்பவனுக்கு நீர்ப்பாசனத் துறையில் வேலை கிடைத்துள்ளது. முதலில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்த சிங், அப்போதே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது, வந்த பாலியல் புகாரை பேசி சமாளித்துள்ளார்.
தொடர்ந்து, இதனை போன்ற செயல்களில் ஈடுபடுவதால், குடும்பத்தினர் அவரை விட்டு விலகியுள்ளனர். இதற்கிடையே, ஏழைமையான குடும்ப சிறுவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, அவர்களை செல்போனில் வீடியோ விளையாட வைத்தும், பரிசுகள் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து, சிறுவர்களுக்கு போதை மருந்தும் கொடுத்து பாலியல் வீடியோக்களை படமாக்கி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இந்த செயலில் சிங் ஈடுபட்டிருந்திருக்கிறார். இந்நிலையில், ராம்பவன் சிங்கை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.