காதலியை பார்ப்பது தப்பா?... அவமானம் தாங்காமல் பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற இளைஞர்!

by Sasitharan, Jan 23, 2021, 18:56 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அவமானம் தாங்க முடியாமல் பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சஜ்ஜன் கா பார் கிராமம் பாகிஸ்தானுக்கு மிகவும் அருகில் உள்ளது. இதற்கிடையே, இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெமாரா ராம் மேக்வால் என்ற இளைஞர் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் 4-ம் தேதி தனது காதலியை பார்க்க ஜெமாரா ராம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் சென்றுள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் வீட்டில் இருந்ததால், அவர்களிடம் ராம் சிக்கி கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ராம் மேக்வாலின் பெற்றோரிடம் தாங்கள் கூறப்போவதாக அப்பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். அவர்களிடம் மேக்வால் பல முறை மன்னிப்பு கோரியும் அவர்கள் மனம் மாறவில்லை. இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் அவமானமாகி விடுமே என வருந்திய ஜெமாரா, பாகிஸ்தானில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்து அன்றைய தினம் நள்ளிரவே இந்திய எல்லையை ராம் மேக்வால் கடந்து சென்றுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அறிந்த அவரது பெற்றோர், தங்கள் மகன் காணாமல்போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பாகிஸ்தானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையை தொடர்பு கொண்ட ராஜஸ்தான் காவல்துறை, இந்த விவகாரம் குறித்து தெரிவித்தனர். இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ராம் மேக்வால் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற போது அந்நாட்டு எல்லை காவல் படையிடம் பிடிபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ராம் மேக்வாலை விடுவிக்கும்படி பாகிஸ்தான் ரேஞ்சர் படையிடம் பிஎஸ்எப் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் பெற்றோருக்கு பயந்து பாகிஸ்தானுக்கு இளைஞர் தப்பியோடிய சம்பவம் ராஜஸ்தான் மட்டுமின்றி இந்தியளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

You'r reading காதலியை பார்ப்பது தப்பா?... அவமானம் தாங்காமல் பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற இளைஞர்! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை