உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தின் தியோரியா பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் கோரக்பூர் ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணித்துக்கொண்டிருந்தார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
வீட்டை விட்டு தப்பி வந்திருப்பார் என ஆரம்பத்தில் நினைத்த காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மிகவும் பயந்த நிலையில் இருந்த அவரிடம் விசாரிப்பதற்காக குழந்தைகள் நல ஆணையத்தில் இருந்து அதிகாரி வரவழைக்கப்பட்டார். குழந்தைகள் நல ஆணைய தலைவர் கனீஸ் ஃபாத்திமா அச்சிறுமியிடம் விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தியோரியாவைச் சேர்ந்த சிறுமி பி.ஏ 2ம் ஆண்டு படித்துகொண்டிருந்தார். அவரது விருப்பத்தை மீறி பெற்றோரும், தாய்மாமாவும் கட்டாயப்படுத்தி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இது தொடர்பாக சிறுமி அதிகாரியிடம் கூறுகியைலி,ஃ ``திருமணத்துக்கு பிறகு என்னை கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர். இதை எனது கணவரிடமும், மாமனாரிடமும் தெரிவித்த போது திருமணம் என்ற பெயரில் உன்னை உன் தாய்மாமாவிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம், எனவே அவர்கள் (கணவரின் உறவினர்கள்) சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும் என மிரட்டினர்.
இருப்பினும் இதற்கு நான் இதற்கு உடன்பட மறுக்கவே என்னை ஒரு இடத்திற்கு கடத்திச் சென்று சிறை வைத்தனர். அங்கு கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் மாதக்கணக்கில் பல முறை என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர். பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர்.
அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து ஒருவழியாக தப்பித்து ஓடிவந்துவிட்டேன் என்று சிறுமி கூறியுள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட குழந்தைகள் நல கமிட்டி, இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர்.