இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த சுனில் அரோரா தனது பதவிக்கலாம் முடிவதால் ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுஷில் சந்திரா நாளை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சுஷில்சந்திரா, தனது பதவிக்காலத்தில் இதுவரை 10 மாநிலத் தேர்தலில் தேர்தல் ஆணையராக வெற்றிகரமாக செயல்பட்டு இருக்கிறார், இவர் தான் வேட்புமனு தாக்கலை ஆன்லைனில் செய்யும் முறையைக் கொண்டுவந்தவர். நாளை பதவியேற்கும் அவர் வரும் மே 2022 வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் பதவி வகிக்க போகும் காலத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரவுள்ளது. இந்த தேர்தல் மிக முக்கியாமானதாக பார்க்கப்படுவதால் இவரின் பணியும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.