இறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு!

by Ari, Apr 14, 2021, 12:38 PM IST

ஒடிசாவில் இறந்தவரை உயிர்ப்பிக்க இன்று வரை சடங்கு முறை பின்பற்றப்படுகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கார்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரபி நஹக். இவர் கோயில் திருவிழாவிற்காக இரண்டு நாள் விரதம் இருந்துள்ளார்.

ரபி நஹக்கின் உடல்நிலை மோசமானதை அடுத்து, அவரை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ரபி நஹக் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்குகளை நடத்துவதற்கு பதில், கிராம மக்களுடன் சேர்ந்து அவரை உயிர்பிக்க சில சடங்குகளையும், பிராத்தனைகளையும் செய்துள்ளனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவர்களின் சடங்குள் முடியும் வரை காத்திருந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு எடுத்துக்கூறி சடலத்தை அடக்கம் செய்ய வைத்தனர்.

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், இந்தியாவில் சில இடங்களில் மூட நம்பிக்கைகள் அப்படியே தான் இருக்கின்றன.

You'r reading இறந்தவரை உயிர்ப்பிக்க விசித்திர சடங்கு! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை