சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு பொதுமக்கள் கொடுத்த சூப்பர் பரிசு..!

by Logeswari, Apr 23, 2021, 12:41 PM IST

தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக மாவட்ட நிர்வாகிக்கு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த சோமசெல்வ பாண்டி என்பவர் திமுக மாவட்ட பொறுப்பு குழுவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அங்குள்ள உரிமையாளரின் மகளுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஒன்றுதிரண்டு திமுக நிர்வாகி வீட்டிற்கு சென்று பலமாக அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு பொதுமக்கள் கொடுத்த சூப்பர் பரிசு..! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை