என்ன ஒரு புத்திசாலித்தனம்..! ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆடம்பரக் காரை விற்ற இளைஞர்..

by Logeswari, Apr 23, 2021, 11:47 AM IST

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கவும் இலவசமாக ஆக்சிஜன் சேவை வழங்கவும் இளைஞர் ஒருவர் தனது விலை உயர்ந்த காரை விற்றது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் முடிவு இல்லாமல் இன்று வரை தொடர்ந்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது.

இதனால் ஏராளமான மக்கள் மிகவும் மோசமாக பாதித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு போதிய ஆக்சிஜன் இன்றி சிலர் உயிர் இழந்தும் வருகின்றனர். மும்பையில் ஷாநவாஸ் ஷேக் என்ற இளைஞர் ஆக்சிஜனை இலவசமாக வழங்கும் நோக்கத்தில் தனது 22 லட்சம் மதிப்புள்ள எஸ்.யு.வி. என்ற காரை விற்று உதவி வருகிறார்.

கொரோனா முதல் அலையில் அந்த இளைஞரின் நண்பனின் தாய்க்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் அவரை காப்பாற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏழை எளிய மக்களுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் இலவசமாக வழங்கும் சேவையை தொடங்கியுள்ளார். இவரது சேவைக்கு பலர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

You'r reading என்ன ஒரு புத்திசாலித்தனம்..! ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆடம்பரக் காரை விற்ற இளைஞர்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை