சீனாவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவ, மாணவியர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
சீனா, ஷான்சி மாகாணம், மிஜி பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர்கள் பள்ளி முடிந்து வழக்கம்போல் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியுடன் வந்து எதிரே வந்த மாணவ, மாணவிகளை சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் பயத்தில் கதிகலங்கி நின்றனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் மீட்புக் குழுவினருடன் விரைந்தனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமயைனி சேர்த்தனர். இதில், 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்துக்கிடந்ததாகவும், படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் மாணவர்கள் 7 பேர் என்றும், மாணவர்கள் 2 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான ஜாவோ என்ற 28 வயதான இளைஞரை போலீசார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும், மாணவ மாணவிகள் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.