நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாணவி தற்கொலை

Jun 5, 2018, 07:49 AM IST

நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2018ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடைபெற்றது.

இந்த நீட் தேர்வுக்கான முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. மொத்தம் எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 11 லட்சம் பேர் தேச்சியடைந்தனர். இதில், 691 மதிப்பெண்கள் பெற்று பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
தமிழக அளவில் 676 மதிப்பெண்கள் பெற்று கீர்த்தனா என்ற மாணவி முதலிடமும், இந்திய அளவில் 12வது இடமும் பெற்றுள்ளார். தமிழகத்தில் மொத்தம், 39.55 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவள்ளூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நேற்று எலி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

பிரதீபா ப்ளஸ் 2வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்த பிரதீபா நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாததால் விரக்தியில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரதீபா வீட்டில் இருந்த எலி மருந்து எடுத்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாணவி தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை