தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

Jun 5, 2018, 08:28 AM IST

நீட் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பம் கிடைக்கும். வரும் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19ம் தேதி மாலை 5 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், தரவரிசை பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும். பின்னர், முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறும். பின்னர், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும்.

தொடர்ந்து, கல்லூரிகளில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கிவிடும். மற்ற விவரங்களுக்கு http://www.tnhealth.org/ , http://www.tnmedicalselection.org/ ஆகிய இணையதள முகவரியில் பார்க்கலாம்.

You'r reading தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை