வங்கி ஏடிஎம்மில் இருந்த ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய நாசக்கார எலி

Jun 19, 2018, 10:38 AM IST

கவுகாத்தியில் உள்ள ஸ்டேட் பாங்குக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்றில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்பு ரூபாய் நோட்டுகளை கடித்து குதறி சுக்குநூறாகாக்கிய எலியில் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள டின்சுகியா என்ற பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் கடந்த சில நாட்களாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால், இதுகுறித்து புகார் கிடைத்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் ஏமிஎம்ணை சரிசெய்ய வந்திருந்தனர். அங்கு தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஊழியர்கள் சம்பந்தப்பட்ட, ஏடிஎம் கருவியை பிரித்து பார்த்தபோது அதில் இருந்த பணம் அனைத்தும் சுக்கு நூறாக கிழிந்து, துண்டு துண்டுகளாக இருந்தது. இதைக் கண்டு வங்கி ஊழிர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது எலியின் நாச வேலை தான் என்று அறிந்துக் கொண்ட ஊழியர்கள் இதுகுறித்து டின்சுகியா போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பு ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

எலி செய்த நாச வேலையால், எஸ்பிஐ வங்கி திணறிப்போய் இருக்கிறது. மேலும், போலீசாரும் ரூ.12 லட்சத்தை முழுங்கி ஏப்பம் விட்ட எலியை எவ்வாறு விசாரிப்பது என்றும் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

You'r reading வங்கி ஏடிஎம்மில் இருந்த ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய நாசக்கார எலி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை