அமெரிக்காவில் காரை கடத்த முயன்றவருக்கு நேர்ந்த கதி!

காரை கடத்த முயன்றவன் சுட்டுக் கொலை!

Jun 19, 2018, 11:25 AM IST

காரை கடத்த முயன்றவனை பொதுமக்களில் ஒருவர் சுட்டுக் கொன்றார். அமெரிக்காவின் வாஷிங்டனில், டம்வாட்டர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.

GUN

ஞாயிறன்று மாலை டம்வாட்டர் சாலையில் குடித்து விட்டு ஒருவர் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றபோது, அந்த வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை.

டோயட்டோ விநியோகஸ்தரின் அலுவலகம் அருகே காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்தபோது, அதேநபர் டம்வாட்டர் நகர வால்மார்ட் அருகே சென்று அங்கிருந்த காரை கடத்த முயன்றுள்ளார். அப்போது காருக்குள் இருந்தவரை இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

மீண்டும் வேறொரு காரை கடத்த ஆயுதந்தாங்கிய அந்த நபர் முயன்றபோது, வால்மார்ட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த பொதுமக்கள் இருவர் தங்கள் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் சுட்டதில், காரை கடத்த முயன்றவன் பலியானான். சந்தேகத்திற்குரிய அந்த நபர் சுட்டதில் 16 வயது இளம்பெண் ஒருவரும் இலேசான காயமுற்றார்.

இத்தகவலை டம்வாட்டர் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் லாரா வோல் தெரிவித்துள்ளார்.

More Crime News


அண்மைய செய்திகள்