படிக்கட்டில் பயணித்தால் ரயில் பாஸ் ரத்து...?

படிக்கட்டில் பயணித்தால் ரயில் பாஸ் ரத்து செய்யப்படும்

Jul 30, 2018, 20:17 PM IST

மின்சார ரயிலில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால், மாணவர்களின் பாஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் எச்சரித்துள்ளார்.

St. Thomas Mount

சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையிலான மின்சார ரயில், மின்கம்பி அறுந்து விழுந்ததால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டது. ரயில் தாமதமாக வந்ததால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். பரங்கிமலை ரயில் நிலையத்தை கடக்கும்போது பக்கவாட்டு சுவரில் உரசியதில், படிக்கட்டில் தொங்கியவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக் கூடாது எனவும் பயணிகள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன், “மின்சார ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் மாணவர்களின் பாஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,பரங்கிமலையில் படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது” என்று கூறினார்.

You'r reading படிக்கட்டில் பயணித்தால் ரயில் பாஸ் ரத்து...? Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை