முதல் பிராமணர் அல்லாத அர்ச்சகர்- கருணாநிதியின் சட்டத்தால் சாத்தியம்

Jul 30, 2018, 20:32 PM IST

தமிழகத்திலேயே முதன்முறையாக பிரமணர் அல்லாத அர்ச்சகர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றி வருகிறார்.

முதன்முதலில் பிராமணர் அல்லாதவர்களை இந்து கோயிலின் அர்ச்சகராக நியமித்தப் பெருமையை கேரளா செய்ததாக சில நாள்களுக்கு முன்னர் பேசப்பட்டது. ஆனால், அடற்கு முன்னதாகவே தமிழகத்திலேயே முதன்முறையாக பிரமணர் அல்லாத அர்ச்சகர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றி வருகிறார்.

இந்தத் தகவல் தற்போது தான் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கேரளத்துக்கு முன்னரே அச்சாதனையை தமிழகம் செய்துள்ளது. இது முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியால் தான் சாத்தியமாகிய சாதனை என தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராகப் பதவி வகித்து வந்த போது தான் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பிராமணர் அல்லாதோரும் அர்ச்சகரகப் பணியாற்ற உரிமை உண்டு என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading முதல் பிராமணர் அல்லாத அர்ச்சகர்- கருணாநிதியின் சட்டத்தால் சாத்தியம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை