அயனாவரம் சிறுமி வழக்கு... 17 கைதிகளுக்கு மருத்துவ சோதனை

17 பேருக்கு கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ பரிசோதனை

Aug 1, 2018, 22:16 PM IST

அயனாவரம் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Girl abuse case

சென்னை அயனாவரத்தி்ல் 12 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அடுக்கு மாடி குடியிருப்பின் காவலாளி உள்பட 17 பேரை கடந்த மாதம் 16ஆம் தேதி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 17 பேரையும் அயனாவரம் மகளிர் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து புழல் சிறையில் மீண்டும் சிறையில்அடைத்தனர்.

இவர்களில் பாபு என்பவர்உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 16 பேருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை, இரத்தப்பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்தன.

மருத்துவ தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 2 மணி நேரம் பரிசோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பான அறிக்கை ஓரிரு நாட்களில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

You'r reading அயனாவரம் சிறுமி வழக்கு... 17 கைதிகளுக்கு மருத்துவ சோதனை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை