ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு அமெரிக்க படைகள் பக்க பலமாக இருந்து வருகின்றன. இதற்காக அமெரிக்க படையினர் மீது தலீபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காபூலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தை குறி வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றதாக தெரியவில்லை. கடந்த 2 வருடங்களில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 13 முறை தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார்.