திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்... நடந்தது என்ன?

வரதட்சணைக்காக நிறுத்தப்பட்ட திருமணம்

by Rajkumar, Sep 11, 2018, 09:55 AM IST

திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் 100 சவரன் வரதட்சணை நகை கேட்டு, ஆசிரியை திருமணத்தை நிறுத்திய தனியார் ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Marriage

பியூர் சிம் புராடக்ட்ஸ் நிறுவன அதிகாரியான மகேந்திரனுக்கும், காட்டூர் சேர்ந்த சுகந்திக்கும் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு 50 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி இருவீட்டாரும் சேர்ந்து பெண்ணுக்கு முகூர்த்தப்பட்டு எடுக்க பிரபல ஜவுளிக் கடைக்கு சென்றனர்.

தங்களது பெண்ணுக்கு ரூ 30,000 க்கு சேலை எடுக்குமாறு பெண் வீட்டார் கேட்க, மாப்பிள்ளை வீட்டார் ஒரு 20,000 ரூபாய்க்கு தான் எடுப்போம் என அடம் பிடித்தனர். பின்னர், இருதரப்புக்கும் மனக்கசப்பு உருவாகி பின்னர் ரூ 22,000 மதிப்பில் முகூர்த்த பட்டு வாங்கினர். இதனால், மனக்கசப்பு ஏற்பட்டது.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் பெண் வீட்டாருக்கு, மணமகன் வீட்டார் ஒரு நிபந்தனை விதித்தனர். தன்மகன் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிவதால் 100 சவரன் நகையும், ரூ 5 லட்சம் பணமும், கூடவே ஒரு காரும் வரதட்சணையாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

ஏற்கனவே பேசியது 50 சவரன் தானே என்றபோதும், 100 சவரன் கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காது என மிரட்டினர்.

இதனால் நாளை நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

மணமகன் வீட்டார் தலைமறைவாகிவிட, மணமகன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். தலைமறைவான மணமகனின் தாய், தந்தை, சகோதரி ஆகியோரை காவல்துறையினர் வலைவீச்சு தேடிவருகின்றனர்.

100 சவரன் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டாரால் மட்டும் திருமணம் நின்று போகவில்லை... பட்டுச்சேலை விவகாரத்தில் மனக்கசப்பை ஆரம்பித்து வைத்த பெண் வீட்டாரின் பிடிவாதமும் ஒரு காரணம். என காவல்துறை கூறுகிறது. விசாரணைக்குப் பின்னரே இந்த விவகாரத்தின் முழு விவரம் தெரியவரும்.

You'r reading திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்... நடந்தது என்ன? Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை