அமெரிக்கா- மேல் வீட்டில் வசித்தவரை சுட்டுக் கொன்ற பெண் போலீஸ்

மேல் வீட்டில் வசித்தவரை சுட்டுக் கொன்ற பெண் போலீஸ்

by SAM ASIR, Sep 11, 2018, 09:27 AM IST

அமெரிக்கா டாலஸ் நகரத்தில் இளைஞரை சுட்டுக் கொன்றதற்காக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

GUN

டாலஸ் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் போத்தம் ஷேம் ஜீன்ஸ் (வயது 26). செயிண்ட் லூஸியாவில் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது தாய் அலிசன் ஜீன்ஸுடன் போத்தம் வசித்து வந்தார். செயிண்ட் லூஸியாவிலிருந்து ஆர்கன்சாஸ் வந்து இயல்பாக அமெரிக்க குடியுரிமை பெற்ற கறுப்பினத்தவர் இவர்.

சில தினங்களுக்கு முன்னர், இரவு தனது வீட்டில் இருந்துள்ளார் போத்தம் ஜீன்ஸ். அப்போது வீட்டினுள் நுழைந்த பெண் போலீஸ் அதிகாரி ஆம்பர் கேஜர் (வயது 30), போத்தம் ஜீன்ஸை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தன் வீடு என்று நினைத்து போத்தமின் வீட்டுக்குள் நுழைந்த ஆம்பர், அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆம்பரை காவல்துறை கைது செய்துள்ளது.

பணி முடித்து சீருடையுடன் வீடு திரும்பிய ஆம்பர். தனது வீட்டுக்கு மேலே இருக்கும் வீட்டுக்குள் தவறுதலாக நுழைந்துள்ளதாக தெரிகிறது. அவரது இரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆம்பரும் போத்தமும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை எனவும் கூறப்படுகிறது. வெள்ளையரான ஆம்பர் கறுப்பினத்தவரான போத்தமை இன வெறியினிமித்தமாக சுட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

You'r reading அமெரிக்கா- மேல் வீட்டில் வசித்தவரை சுட்டுக் கொன்ற பெண் போலீஸ் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை