தடையை மீறி சென்னையில் ஹூக்கா பார் நடத்திய 2 பேர் கைது

சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் தடைசெய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Hookah Bar

சென்னை அண்ணாநகர் பகுதியில் அனுமதியின்றி ஹூக்கா பார் நடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டனர்.

அண்ணாநகர் கிழக்கு 4 வது அவென்யூவில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றின் பெயரில் ஹூக்கா மையம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

Hookah Bar

இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அசோக்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த மன்மதன் ஆகிய இருவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து புகைப்பிடிக்கும் குழாய்கள், கண்ணாடி குடுவைகள் மற்றும் புகையிலைகள் போன்றவைகளும் கைப்பற்றப்பட்டன.