பேரரிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில், தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது."
"தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் ஆளுநர் இந்த விசயத்தில் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்" எனக் குற்றம்சாட்டினார்.
"இந்நிலையில் மீண்டும் அமைச்சரை கூடி ஏழு பேர் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்தால் அதை ஆளுநர் மீற முடியாது என்றார். இதேபோல தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. அது சிறை துறை வரை அதிகரித்துள்ளது" எனக் கூறினார்.