சிம்லாவில் ஜீப் கவிழ்ந்து கோர விபத்து: 13 பேர் பலி

by Isaivaani, Sep 22, 2018, 17:46 PM IST

இமாச்சல பிரதேசத்தில் ஜீப் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சல பிரதேம் மாநிலத்தில் சிம்லா மாவட்டத்தில் உள்ள தியுனி சாலையில் ஸ்னைல் என்ற பகுதியில் இன்று காலை பயணிகளுடன் ஜீப் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இதுவரையில் 4 பெண்கள் உள்பட 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், பலரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை