Thursday, May 13, 2021

ஜம்மு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: மினி பஸ் கவிழ்ந்து 20 பேர் பலி

by Isaivaani Oct 6, 2018, 22:44 PM IST

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த மினி பஸ் பள்ளித்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று மினி பஸ் ஒன்று ரம்பான் நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

ஜம்மு & ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது கேலா மோத் என்ற பகுதியில் குறுகிய வளைவில் பேருந்து திரும்ப முயன்றது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை ஓரத்தில் உள்ள பெரிய பள்ளத்துக்குள் விழுந்து, கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 13 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

You'r reading ஜம்மு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: மினி பஸ் கவிழ்ந்து 20 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News

அண்மைய செய்திகள்