நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆம் அத்மி வீழ்த்தும்: அரவிந்த் கெஜ்ரிவால்

by Isaivaani, Oct 6, 2018, 22:13 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் சக்தி ஆம் ஆத்மிக்கு மட்டும் தான் உள்ளது என்று அரவிந்த் கெஜர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லி ரோகினி பகுதியில் இன்று ஆம் ஆத்மி தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசினார்.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு விழும் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் காங்கிரசை ஆதரிக்க தந்திரமாக முன்வந்துள்ளன.

பாஜகவின் ஆட்சியால், மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதே நேரத்தில், ராகுல் காந்தி மற்றும் ஊழல் கட்சியான காங்கிரசுக்கும் வாக்களிக்கவும் மக்கள் விரும்பவில்லை. டெல்லியில் பாஜகவுக்கு எதிரான மாற்றுச்சக்தியாக ஆம் ஆத்மி மட்டுமே உள்ளது.

டெல்லியில், பொது இடங்களில் மக்களிடம் மோடி அரசுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகளாக மாற்றி வருகின்றனர். ஆம் ஆத்மி வேட்பாளர்களையும் தோற்கடிக்க அவர் திட்டமிட்டுள்ளனர்.

2014ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றிப்பெற வைத்தீர்கள். 2015ம் ஆண்டில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70ல் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை வெற்றிபெற வைத்தீர்கள்.

ஆனால், இன்றைய சூழலில் டெல்லி மக்களுக்காக உழைப்பது பாஜக எம்.பிக்களா அல்லது ஆம் ஆத்மி எம்எல்ஏக்களா என்பதை மக்கள் நன்றாக சிந்தித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

You'r reading நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆம் அத்மி வீழ்த்தும்: அரவிந்த் கெஜ்ரிவால் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை