நைரோபி: கென்யா நாட்டியில் இன்று எதிரெதிரே வந்த லாரி மீது பேருந்து ஒன்று மோதியதில், அதில் பயணித்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி 3000 பேர் உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள மோசமான சாலைகள் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததே.
இந்நிலையில், கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள புசியா நகரில் இருந்து சென்ற பேருந்து இன்று அதிகாலை நாகுரு எல்டோரெட் நெடுஞ்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் நாகுரு நகரில் இருந்து வேகமாக வந்த லாரி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், இதில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.