ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி ஆரம்பித்து, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கருத்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்திருக்கிறார். இது ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். முதலில் அவர் மக்கள் பணியாற்றட்டும்.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் சமூக சீர்திருத்த கருத்துக்களை கொண்டு வந்தவர். அண்ணா அவர்கள் எம்.ஜி.ஆரை இதயக்கனி என்று அழைத்தார்.
தமிழகத்தில் எந்த சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்லட்டும். அதை சரி செய்துகொள்கிறேம். அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி அவர் அறிவார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பல கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டும் திமுகவுக்கு டெபாசிட் காலியாகிவிட்டது. தினகரன் வெற்றி நிரந்தரமானது அல்ல.
ரஜினியால் மட்டுமல்ல வேறு யாராலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார்.