வெள்ளை எலிக்காக உயிரைவிட்ட சிறுமி: போபாலில் பரபரப்பு

by Isaivaani, Jan 7, 2018, 08:18 AM IST

போபால்: செல்லமாக வளர்த்த வெள்ளை எல இறந்துபோனதால், வேதனையில் சிறுமி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேச மாநிலம், அயோத்யா நகர் பகுதியை சேர்ந்த சிறுமி திவ்யான்ஷி ரத்தோர் (12). 7ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் கடந்த ஒரு வாரமாக வெள்ளை எலி ஒன்றை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அந்த வெள்ளை எலி நேற்று முன்திரம் இறந்துவிட்டது அந்த எலியை தோட்டத்தில் புகைத்த திவ்யான்ஷி நேற்று அந்த இடத்தில் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வெள்ளை எலி இறந்தது முதல் திவ்யான்ஷி மிகவும் வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்ற திவ்யான்ஷி வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை. அவரது தாய் பல முறை குரல் கொடுத்தும் கதவை திவ்யான்ஷி கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவரது தாய் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, திவ்யான்ஷி துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுயின் தற்கொலை தொடர்பாக விசாரித்தபோது, செல்லமாக வளர்த்த வெள்ளை எலி இறந்ததால் மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை