நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை- பிரான்ஸ் தகவல்

நேதாஜி இறப்பில் மர்மம் விலகாத நிலையில், அவர் விமான விபத்தில் இறக்கவில்லை என பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது.

நேதாஜி மரணம்

நேதாஜி, இறப்பில் உள்ள மர்மத்தை விலக்க பல கமிஷன்கள் அமைக்கப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் அவர் இறந்ததாக பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என பிரான்ஸ் நாட்டு புலனாய்வுத் துறை தகவலில் சொல்லப்பட்டுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த ஜே.பி.பி. மூர், பிரான்ஸ் நாட்டு உளவுத்துறைக்கு அளித்துள்ள அறிக்கை 1947 டிசம்பர் 11ன்படி, 1947ம் ஆண்டு வரை நேதாஜி உயிரோடு இருந்தாகச் சொல்லப்படுகிறது.