லேடி ராமானுஜர் என்று அழைக்கப்பட்ட கணித மேதை மரியம் 40 வயதில் மரணம்

Maryam Mirzakhani, first woman to win maths Fields Medal, dies

Jul 16, 2017, 10:55 AM IST

ரான் நாட்டைச் சேர்ந்த மாபெரும் கணித மேதை மரியம் மீர்ஷாகனி, தனது 40 வயதில் மரணம் அடைந்துள்ளார்.

லேடி ராமானுஜர் மரியம் மரணம்

கணிதத்துறையினல் 'லேடி ராமனுஜர்' என்று அழைக்கப்பட்ட இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் கணிதத்துறை பேராசிரியராக பணி புரிந்து வந்த அவர், மார்பக புற்று நோய் காரணமாக மரணம் அடைந்தார். 1977ம் ஆண்டு பிறந்த மரியம், கணித ஒலிம்பியாட் போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றவர். ஹார்வர்ட் பல்கலையில் பட்டம் பெற்ற பின், பிரின்ஸ்டன் பல்கலையில் பணிபுரிந்தார். பின்னர் , ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் இணைந்தார்.

மரியத்தின் கணவர் செக்குடியரைச் சேர்ந்த விஞ்ஞானி ஜான்வான்ட்ராக் ஆவார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறார். ஈரான் அதிபர் ஹஸன் ரஹானி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'ஜீரணிக்கமுடியாத துயரம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

You'r reading லேடி ராமானுஜர் என்று அழைக்கப்பட்ட கணித மேதை மரியம் 40 வயதில் மரணம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை