அண்ணனின் அதிரடி உத்தரவு… ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கிய தளபதி ரசிகர்கள்

Advertisement

கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி விஜய் ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் தினமும் கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

ஆக்ஸிஜன் சிலிண்டர் வேண்டி நோயாளிகளின் உறவினர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் நிறுவனங்கள் முன் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பணம் இருப்பவர்களும் வாங்க முடிவதில்லை. இதனால் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கும் அளவிற்கு சூழல் உருவாகியுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அரசாங்கம், உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்க உத்தரவிட்டதோடு, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியை கேட்டுள்ளது.

இதனிடையே, நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டதின் பேரில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.

Advertisement
/body>